நானுஓயாவில் விபத்திற்கு உள்ளான எரிபொருள் பௌசர்
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் பயணித்த பௌசர் ஒன்று நேற்று மாலை (14) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக வெலிமடை நோக்கி பயணிக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்கான காரணம்
குறித்த பௌசரில் 33.000 ஆயிரம் லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் வெவ்வேறாக பிரித்து இருந்ததாகவும் பெருமளவிலான எரிபொருள் இந்த விபத்தில் வெளியேறி வீணாகியுள்ளதுடன் குறித்த பகுதியில் பரவியுள்ளது எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பௌசர் கவிழ்ந்ததையடுத்து வழிந்தோடிய பெட்ரோல் ,டீசலை பெருந்திரளான பொது மக்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து சேகரித்துக் கொண்டனர்.
எனினும் குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
