வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களை 12 மாதங்களுக்கு இடைநிறுத்துவதற்கு பொலிஸாரால் கோரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் என வாகன சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்ட நடவடிக்கை
அத்துடன், நேற்றையதினம்(26.12.2024) மதுபோதையில் வாகனம் செலுத்திய 395 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அனைத்து வகையான விதிமீறல்களிலும் ஈடுபட்ட மொத்தம் 7,950 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
