பிரித்தானிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவில் மணிக்கு 100 மைல் வேகத்தில் இயோவின்(Eowyn) புயல் வீசக்கூடும் என்பதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு புயல் பிரித்தானியாவில் ஏற்படவில்லை என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் நாளை(25.01.2025) வெள்ளிக்கிழமை தொடருந்து சேவைகள் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்கள் இரத்து
அத்துடன், தொடருந்து பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து சேவைகள் இருக்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரித்தானியாவின் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் மஞ்சள் மற்றும் அம்பர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஸ்கொட்லாந்தின் தலைநகரில் உள்ள பாடசாலைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பூங்காக்கள் நாளை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புயல் காரணமாக நாளை அயர்லாந்துக்குச் செல்லும் விமானங்களும் இரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ 24,000 கோடி மதிப்பிலான மாளிகையில் வசிக்கும் பெண்மணி: அவரது குடும்ப சொத்துக்களின் மதிப்பு News Lankasri

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 ரீலோடட் போட்டியாளருக்கு விருந்து வைத்த சரத்குமார், சர்ப்ரைஸ் போன் கால்.. இந்த வாரம் நடக்கும் விஷயங்கள் Cineulagam

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam
