குளுக்கோமா நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
குளுக்கோமா (Glaucoma) நோயானது அறிகுறிகள் இல்லாமல் படிப்படியாக கண் பார்வையை இழக்க செய்யும் என்றும் கண்களை பரீட்சித்துப் பார்ப்பதன் மூலம்தான் இதனை கண்டு பிடிக்கலாம் என கண் வைத்திய நிபுணர் சர்வானந்தம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நோயை சரியான நேரத்தில் கண்டுபிடிப்பதன் மூலம் மருந்துகள் அல்லது லேசர் சிகிச்சை அல்லது சத்திர சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியும்.
பரிசோதிப்பதன் மூலம்
ஆனால் அநேகமாக சிகிச்சைக்கு வருபவர்கள் குறித்த நோய் முற்றிய பின்னரே சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதனை நாங்கள் கட்டுப்படுத்துவது கடினமான விடயம்.
இந்த நோயானது சிறிது சிறிதாக கண்ணில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் உணர்வது கடினம்.
பார்வை புலமானது சிறுத்துக் கொண்டு செல்லும். நடப்பது கூட கஷ்டமாக இருக்கும். இது ஒரு அறிகுறி இல்லாத நோய் என்பதால் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண் அழுத்தத்தை பார்த்து, கண் பின்புறத்தை பரிசோதிப்பதன் மூலம் இந்த குளுக்கோமா நோயினை கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ News Lankasri
