7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 'மஞ்சள்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இன்று (01.08.2026) வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல், நாளை (02) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
கனமழை பெய்ய வாய்ப்பு
தீவிரமான தென்மேற்குப் பருவமழையின் காரணமாக, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை மற்றும் காற்று நிறைந்த சூழல் இன்றும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
இதற்கிடையில், சில இடங்களில் 100 மி.மீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri