எரிபொருள் தட்டுபாடு: ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் அவல நிலை(Photos)
பெட்ரோல் வழங்கப்படாமை காரணமாக கவலை அடைந்துள்ள ஆலையடி வேம்பு பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீண்ட நாட்களாக பெட்ரோல் வழங்கப்படாத நிலையில், ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெட்ரோலை பெறும் பொருட்டு தமது வாகனங்களுடன் காத்திருந்த பொதுமக்களே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.
அவலம்
மட்டக்களப்பு - அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் 9 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உள்ளதாகவும் இதில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மூன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களும் உள்ள நிலையில் இந்த இரு நிலையங்களையே அதிகம் தாம் பயன்படுத்துவதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

ஆயினும் இந்நிலையங்களுக்கு 15 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் வழங்கப்படவில்லை எனவும் ஏனைய நிலையங்களுக்கு அவ்வப்போது வருவதாகவும் கூறும் அவர்கள் ஒரு நிலையத்திற்கு மாத்திரம் நாளாந்தம் எரிபொருள் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இருந்தபோதிலும் அந்த நிலையத்தின் ஊடாக தாம் எரிபொருளை பெறமுடியாத நிலை இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு தீர்வு வழங்காவிடின் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதேநேரம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் துவிச்சக்கரவண்டியினை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

எதிர்பார்ப்புடன் மக்கள்
கடந்த சில நாட்களாக வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் வீதி ஓரங்களில் படுத்து உறங்குவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆங்காங்கே சிறிய அளவில் உணவு சமைத்து உண்பதுடன், சிலர் விளையாட்டுக்களில் ஈடுபட்டு நேரத்தை கடத்துவதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மன அழுத்தம் காரணமாக சில நேரங்களில் வாகன உரிமையாளர்கள் மத்தியில் கைககலப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களும் உருவாகியுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள், விவசாயிகள், வியாபாரிகள், சாரதிகள் என நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் அலைந்து திரிவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது தான் கப்பலில் ஏறியுள்ளேன்! ஓரிரு நாளில் வேலையை காட்டுவேன்: தம்மிக்க பெரேரா சூளுரை |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
வாணி ராணி சீரியல் நடிகர் முரளியை நினைவிருக்கிறதா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் பேட்டி Cineulagam
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri