நாடு இருளாகும் சாத்தியம்! மின்சார சபை தொழிற்சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
எதிர்காலத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எவருக்கும் தெரியாத இந்த உடன்படிக்கையை அரசாங்கத்தினால் நாட்டுக்கு வெளிப்படுத்தப்படாவிட்டால், பணிப்புறக்கணிப்பை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் (Ranjan Jayalal) தெரிவித்துள்ளார்.
பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ,பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டால். பொதுமக்கள்
அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும்.
எவ்வாறிருப்பினும், முன்னறிவித்தலின்றி பணிப்புறக்கணிப்புக்கு செல்லத்
தயாரில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால்
தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
