தனியார் பேருந்து உரிமையாளர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த வார இறுதிக்குள் அனைத்து தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்த வாரத்திற்குள் தனியார் பேருந்து நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் கெமுனு விஜெரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தனியார் பேருந்து பணியாளார்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகக்கூடியவர்கள் என்பதால் அவர்களுக்கு சுகாதாரத் துறையினரை போன்று தடுப்பூசிகள் செலுத்தப்படவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
தனியார் பேருந்து சேவையில் சுமார் 45,000 பணியாளர்கள் உள்ளனர்,
இதேவேளை ரயில்வே துறையினருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவில்லை என்றும்
கெமுனு விஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
