டெல்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை
உலகளாவிய ரீதியில் எதிர்வரும் வாரங்களில் 200 மில்லியனுக்கும் மேற்பட்டோர் டெல்டா கோவிட் வைரஸ் பிறழ்வுடன் அடையாளம் காணப்படலாமென உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை (WHO) விடுத்துள்ளது.
உலகளாவிய ரீதியில் இதுவரை 124 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் டெல்டா பிறழ்வு பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் காலத்தில் டெல்டா கோவிட் வைரஸ் உலகளாவிய ரீதியில் பிரதான வைரஸாக மாறுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, குறிப்பாக ஐரோப்பிய மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியங்களில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஸ்தாபனத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும்,தடுப்பூசி வேலைத்திட்டம் மந்தகதியாக முன்னெடுக்கப்படும் நாடுகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் செயற்பாடானது எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக மாறக்கூடுமென உலக சுகாதார ஸ்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri