இலங்கையில் சொக்லைட் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் விற்பனை செய்யப்படும் சொக்லைட்டுக்கள் தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள சொக்லைட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை கண்டறிவதற்கான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள் அவதானம்
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சட்டவிரோத முறையில் கொண்டு வரப்படும் சொக்லைட்டுக்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவ்வாறான சொக்லைட்டுக்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு எதிராக உணவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
