இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் பொருளாதாரம் (Sri Lanka Economy) ஸ்திரத்தன்மை அடைவதற்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த ஆண்டின் இறுதியில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படவுள்ள திடீர் கொள்கை மாற்றங்களால் இலங்கையின் மீட்சி ஸ்தம்பிதமடைந்துவிடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் முன்னைய நிதியை மீட்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரிகளை உயர்த்தியுள்ளதுடன் சில மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இதன் காரணமாக கடந்த ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர் மீட்புக் கடனை இலங்கை பெற்றுள்ளது.
ஆனால், அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் சிக்கன நடவடிக்கைகளுக்கான உறுதிப்பாட்டை பலவீனப்படுத்தக்கூடும்.
மேலும், இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் ஏதேனும் தாமதம் ஏற்பட்டால் அது வாய்ப்புகளையும் பாதிக்கலாம் என்றும் ஆசிய வங்கி எச்சரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
