போலி நாணயத்தாள், ஆவணங்கள் தயாரிக்கும் நபருக்கு நேர்ந்த கதி
தென்னிலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட தயாரான நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஹங்கம பிரதேசத்தில் 500, 1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் தாள்கள் மற்றும் கணனி ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நாணயத்தாள்
கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் பணி புரியும் 47 வயதான அஹங்கம பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நாணயத்தாள்களுக்கு மேலதிகமாக சுற்றுலாப் பயணிகளின் வீசா காலத்தை நீடிப்பதற்காக பெறப்பட்ட 10 கடவுச்சீட்டுகளும் சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக அஹங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.