யாழில் ஆலயம் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்...! விடுக்கப்படும் எச்சரிக்கை
யாழில் ஆலய வழிபாட்டுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசாரணை
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் விரத வழிபாட்டுக்கு ஆலயம் செல்லும் பெண்களை இலக்கு வைத்து வழிப்பறியில் ஈடுபட்டவரே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். கொட்டடியைச் சேர்ந்த 28 வயதுடையவரே கைது செய்யப்பட்டார்.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான பொலிஸாரே இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.





ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
