இணையத்தில் க்ரீம் வாங்கும் பெண்களுக்கு ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
இணையத்தின் ஊடாக முகம் மற்றும் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை கொள்வனவு செய்யும் பெண்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் பெண்கள் சருமத்தை வெண்மையாக்கும் க்ரீம்களை பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக நுகர்வோர் மற்றும் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
சிக்கல் நிலை
மேலும், அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
சமூக வலைத்தளங்களுக்கு சென்றால் பெண்ணொருவர் வந்து இந்த க்ரீம்களை பயன்படுத்தினால் வெண்மையாகலாம் என்று சொல்கிறார்.

அதை நாங்கள் விளம்பரமாகவே பார்க்கிறோம். அந்த விளம்பரத்தைப் பார்த்தால், அந்த விளம்பரத்தை வெளியிட்டவரின் தொலைபேசி எண் மட்டுமே இருக்கும். சில சந்தர்ப்பங்களில் தொலைபேசி இலக்கம் இல்லை, முகவரி இல்லை.
அதிலும் குறிப்பாக சருமத்திற்காக விற்பனை செய்யப்படும் இந்த வகையான பொருட்களை கொண்டு வந்து பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்சினை என்றால், இந்த பொருளை எந்த நபர் நமக்கு விற்றார் என்று கண்டுபிடிக்க முடியாது.

எனவே, சமூக ஊடகங்கள் மூலம் இதுபோன்ற விடயங்களை முற்பதிவு செய்வதிலும் பெறுவதிலும் நமது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan