3 மாதங்களுக்குள் மின்சார கட்டண நிலுவை செலுத்தாதோருக்கு எச்சரிக்கை
மூன்று மாத காலத்திற்குள் மின்சாரக் கட்டண நிலுவைகைளை செலுத்த தவறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் கட்டணங்களை செலுத்த தவறினால் அவ்வாறானோரிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யுமாறு இலங்கை மின்சார சபை மற்றும் லோகோ நிறுவனம் என்பனவற்றுக்கு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இலங்கையில் மின்சார பயனர்களினால், சுமார் ஐயாயிரம் கோடி ரூபா கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபைக்கு 4400 கோடி ரூபாவும், இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கு (லோகோ) 600 கோடி ரூபாவும் கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளது.
மாதாந்த மின் கட்டணத்தை 30 நாட்களுக்குள் அறவீடு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் கடந்த காலங்களில் மின்சாரக் கட்டணத்தை செலுத்த சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




