கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென அரசாங்கத்திற்கு எச்சரிக்கை
அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏமாற்றுகின்றது என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில் கிராமப்புற பாடசாலைகளை மூடுவது, பாடப்புத்தகங்களை இல்லாமல் செய்வதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் அல்லது பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெடிக்கும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் 'பாடசாலைகள் மூடப்படுகின்றன, பாட புத்தகங்கள் இல்லை, மாணவர்கள் கல்வியை விட்டு வெளியேற்றம், சீர்திருத்தத்தை தோற்கடிப்போம்' எனும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தலைமையில் நேற்று (14) மட்டக்களப்பு பேருந்து தரிப்பு நிலையத்தில் கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றும் அரசாங்கம்
மேலும், அராசாங்கம் அத்தியாவசிய கல்விக்காக நூற்றுக்கு ஆறு சதவீதம் ஒதுக்குவதாக தெரிவித்து அதனை இன்று வரை வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யாமல் மக்களை ஏன் ஏமாற்றுகிறது.
இன்றைய இளைய சமுதாயத்தினர் நாளைய தலைவர்கள் அவர்களின் கல்வி தேவைக்காக ஒதுக்கப்படும் நிதியை இடை நிறுத்தினால் மாணவர்களின் கல்வி எந்தளவுக்கு செல்லும் மக்களே சிந்தியுங்கள்.
இவ்வாறான அரசாங்கத்தின் செயற்பாட்டை கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளோம். ஏன் என்றால் கிராம புறங்களில் உள்ள பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை மூடுவதுக்கு தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அரசாங்கம் கிராமபுற பாடவசாலைகளை மூடினால் அந்த மாணவர்களின் நிலை அவர்களின் பெற்றேர்களின் நிலை அவர்களின் வீட்டின் நிதி நிலமை அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்னாவாகும சிந்தியுங்கள்.

போலியான நம்பிக்கை
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசு தொகையை 10000 ரூபாவாக உயர்தியதால் பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கம் சொல்லும் எதற்கும் எதிர்ப்பு தெரிவிக்காது தலையாட்டிச் செல்வார்கள் என நினைக்கு கூடாது.
அரசாங்கத்துக்கு மீண்டும் வலியுறுத்துவது இந்த நாட்டிலுள்ள மாணவர்களை ஏமாற்றாது போலியான நம்பிக்கையை வழங்காது கொடுத்து வாக்குறுதிகளை சரியான முறையில் சரியாக நிறைவேற்ற வேண்டும்.
எனவே மாணவர்களை மீண்டும் மீண்டும் முட்டாள்கள் ஆக்க வேண்டாம். அத்தோடு அரசாங்கம் இந்த பாடசாலைகளை மூடுவது மற்றும் பாட புத்தகங்களை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



