டெங்கு நோய் பாதிப்பை கட்டுப்படுத்த சிறப்பு திட்டம்
இவ்வாண்டில் டெங்கு நோய் பாதிப்பால் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வைத்தியர் சுதத் சமரவீர கூறுகையில், நடப்பாண்டில் இதுவரை 19,000 க்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு பாதிப்பு
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இதனடிப்படையில், அதிக ஆபத்துள்ள MOH பிரிவுகளை இலக்காகக் கொண்டு ஒரு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டத்தை தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையிலான பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
முத்துவின் வாழ்க்கையில் கிடைத்த பெரிய வாய்ப்பு, செம கோபத்தில் ரோஹினி... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam