இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்
இலங்கையிலுள்ள பல மாவட்டங்களில் இன்றைய தினம் (22.02.2024) இயல்பை விட அதிகமாக வெப்பநிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் அதிக வெப்பநிலை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக வெப்பநிலை காணப்படும் என்பதால் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறும், அதிக நீரை பருகுமாறும், வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நீர் பருகுதல்
தற்போதைய நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் வயது வந்தோர் 3 லீட்டர் நீரையும், சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரையும் குடிப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது என சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனத்தின் போஷாக்கு பிரிவின் தலைவர் மருத்துவர் ரேணுகா ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நாட்களில் அதிக தண்ணீர் குடிக்காமல் இருப்பது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சூரிய ஒளி
அத்துடன் நீருக்கு மேலதிகமாக தர்பூசணி, தோடம்பழம் போன்ற நீர் சத்துக்களை கொண்ட பழங்களை சாப்பிடுவதும் மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெப்பம் மற்றும் சூரிய ஒளி அதிகமாக இருக்கும் போது வெளியே செல்வதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
வேலைக்குச் செல்வோர் அதிக தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் பொருத்தமானது என மருத்துவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சார பயன்பாடு
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு நாட்டு மக்களுக்கு இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை தொடர்ந்து நீர் மின் உற்பத்தியை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
இந்த செயற்பாட்டினால் அனல் மின் உற்பத்தியை 63% ஆக அதிகரிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மின் தேவை அதிகரித்து வருவதால் நீர்த்தேக்கங்களில் நீர் நிலைகளை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri