பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான எச்சரிக்கை
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம் பெயர்ந்தோருக்கு கடுமையான சிறைதண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலகில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வதையே விரும்புகின்றனர். இதன் காரணமாக அவர்கள் சட்டவிரோதமாகவோ அல்லது கடத்தல்காரர்கள் மூலமாகவோ செல்கின்றனர், அப்படி செல்லும் போது, ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அடிக்கடி சமூகவலைத்தளங்களில் பார்க்க முடியும். இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க, பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம் பெயர்ந்தோருக்கும் கடுமையான சிறைதண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Enough is enough.
— Priti Patel (@pritipatel) July 4, 2021
Next week we’ll introduce the Borders Bill to go after these gangs exploiting people & deter illegal entry with tougher criminal offences for those attempting to enter the UK illegally.
Part of our firm but fair #NewPlanForImmigration?? https://t.co/dXmxFvAfca
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில், சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு வர விரும்பும் புலம்பெயர்ந்தோர் கடுமையான தண்டனைகளை எதிர் கொள்ள நேரிடும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதிய தேசிய அமலாக்க விதிகளின் படி, சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைவது ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றப்படவுள்ளது. இதற்கு முதலில் ஆறு மாத சிறை தண்டனையாக இருந்தது.
தற்போது அது நான்கு ஆண்டுகள் வரை உயரும். இது குறித்து உள்துறை அமைச்சர் பிரதி பட்டேல் கூறுகையில், பிரித்தானியாவின் தேசிய மற்றும் எல்லைகள் மசோதாவில் புகலிடம் முறையை சரிசெய்ய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. குடியேற்றத்திற்கான எங்களின் இந்த புதிய திட்டம் நியாயமானது, அது உறுதியானது.
பாதுகாப்பான சட்ட வழிகள் மூலம் மக்களை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம். அதே வேலை சட்டவிரோதமாக நுழைய முயன்றால், இந்த புதிய திட்டம் அந்த குற்றங்களை தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மசோதாவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களில், மக்கள் எவ்வாறு பிரித்தானியாவிற்குள் நுழைந்தார்கள்? அவர்களின் வருகை சட்டபூர்வமானதா? இல்லையா? என்பது சரிபார்க்கப்படும்.
அதன் பின், எந்தவொரு புகலிடக் கோரிக்கையை சரிபார்க்கும் போது, அது சரியானதாக இருந்தால், பிரித்தானியாவின் அவர்களின் நிலை குறித்து பரிசீலிக்கப்படும் என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.