வெப்பநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின் அளவு, மனித உடலால் உணரப்படும் அளவிற்கு எச்சரிக்கை மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் இவ்வாறு வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
எனவே, அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் போதியளவு நீர் அருந்துமாறும், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், வயோதிபர்கள், சிறுவர்கள் மற்றும் நோயாளர்கள் குறித்தும் மிகுந்த அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.