குழந்தைகளுக்கு பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வைத்தியரின் பரிந்துரையின்றி குழந்தைகளுக்கு அதிகளவில் பெரசிட்டமோல் கொடுக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு அதிக அளவிலான பெரசிட்டமோல் கொடுப்பதனால் வைத்தியசாலைகளில் பல குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் குழந்தைகளின் கல்லீரலுக்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுவதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு விவரங்கள் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்தன வலியுறுத்துள்ளார்.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தில் நேற்று (28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக ஆலோசனை
வைத்தியர்களின் பரிந்துரைகளில் பெரசிட்டமோல் மருந்தைக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குக் காய்ச்சல் ஏற்படும் போது அதிக அளவு பெரசிட்டமோல் கொடுக்கப்படுவதால் குழந்தைகளின் நிலை மேலும் மோசமான நிலைக்குள்ளாகும்.
சில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் கண்டறிந்தால் பெரசிட்டமோலை அதிக அளவில் கொடுக்கின்றனர்.இவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி திட்டமிடப்பட்ட அளவை வழங்க வேண்டும்.
இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள 0112 686 143 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் புதிய தோற்றத்தில் ஆர்த்தி ரவி! எப்படி இருக்காங்கன்னு பாருங்க Manithan

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
