நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு மக்களுக்கு வைரஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்றுக்கள் காரணமாக நாள் தோறும் 60 முதல் 70 சிறுவர்கள் வரையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
வைரஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு சுகாதார வழிமுறைகள் பின்பற்ற வேண்டுமென தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்று தாக்கம்
காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்கள் நாடு முழுவதிலும் பரவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் காய்ச்சல், சளிக்காய்ச்சல், டெங்கு மற்றும் கோவிட் உள்ளிட்ட வைரஸ் தொற்று தாக்கம் தொடர்பில் அடிக்கடி பதிவாகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் பயன்படுத்திய சுகாதார வழிமுறைகள் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டால் வைரஸ் தொற்றுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என மருத்துவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri