கனடாவில் PRESTO அட்டைகளை பயன்படுத்தும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயன்படுத்தப்படும் PRESTO அட்டை தொடர்பில் எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள கடன் அட்டை பயன்பாடு
GO Train மற்றும் UP Express ஆகிய பொதுப் போக்குவரத்து சேவைகளில் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகளை பயன்படுத்தும் நடைமுறை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் குறித்த அட்டைகளைப் பயன்படுத்தி கொடுப்பனவு செய்யும் போது சில சந்தர்ப்பங்களில் இரண்டு தடவைகள் கட்டணங்கள் அறவீடு செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைக்கடிகாரங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பவற்றின் ஊடாக அட்டைகளை டெப் செய்யும் போது இவ்வாறு இரண்டு தடவைகள் கட்டண அறவீடு செய்யப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக மெட்ரோலிங்க்ஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை
சில வாடிக்கையாளர்கள் ஸ்கேன் கருவிகளுக்கு அருகாமையில் தங்களது அட்டைகளை காண்பிக்கும் போது, மிக அருகாமையில் இருக்கும் வேறொரு அட்டையின் விபரங்களின் அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இந்த அட்டைகளில் கொடுப்பனவு செய்யும் போது வாடிக்கையாளர்கள் இந்த விடயங்கள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.