சட்டவிரோதமாக சொத்துக்களை குவிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஒரு நபரோ அல்லது குழுவொன்றோ பாரிய சொத்துக்களை சம்பாதித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் சட்டத்தை நடைமுறைப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தவர்கள் தொடர்பில் ஏற்கனவே சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல்
இதேவேளை, 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 40 கோடி பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கமைய, போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |