போலிக் காவல்துறையினர் குறித்து எச்சரிக்கை
காவல்துறையினர் என்ற போர்வையில் போலியான நபர்கள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கட்டுகஸ்தோட்டை பகுதியில் நான்கு பேர் காவல்துறையினர் என்ற போர்வையில் வீட்டில் புகுந்து கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
விசாரணைகளுக்காக வந்துள்ளதாகத் தெரிவித்து குறித்த கொள்ளையர்கள் ஐந்து லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொள்வோருக்கு அவர்களது அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு அவ்வாறானவர்களிடம் கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
