சூடுபிடிக்கும் உக்ரைன் - ரஷ்ய போர்க்களம்! களமிறக்கப்பட்டுள்ள உலகின் தலை சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் படைகளை முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகின் தலைசிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவரான ‘வாலி’ போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ரஷ்யப் படைகளுக்கு எதிரான போரில் களமிறங்கியுள்ளார்.
One of the world’s most fearsome snipers nicknamed Wali has already killed 6 Russian soldiers. Hero! ??
— Ukraine News UK (@UkraineNewsUK) March 9, 2022
Credit: Reuters #Ukraine️ #UkraineRussianWar #Chernobyl #Mig29 #IStandWithUkraine️ #StandWithUkraine #UkraineWar #UkraineUnderAttack pic.twitter.com/13Ib0KMcMI
40 வயதான பிரெஞ்சு - கனடாவின் கணனி விஞ்ஞானியான வாலி, 2009 மற்றும் 2011 க்கு இடையில் இரண்டு முறை ஆப்கானிஸ்தான் போரில் பணியாற்றியுள்ளார். வாலி உலகின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.
கடந்த புதன்கிழமை உக்ரைனுக்கு வந்த வாலி இரண்டு நாட்களில் ஆறு ரஷ்ய வீரர்களைக் கொன்றுள்ளதாகவும் அவரால் ஒரு நாளைக்கு சுமார் 40 பேரை சுட்டு வீழ்த்த முடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் “நான் அவர்களுக்கு உதவ விரும்புகின்றேன், ஏனென்றால் இங்கு மக்கள் ஐரோப்பியராக இருக்க வேண்டும் என்பதற்காக குண்டுவீச்சுக்கு ஆளாகின்றார்கள், அவர்கள் ரஷ்யாவிற்கு எதிராக போராட வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.