இஸ்ரேலில் தோண்டி எடுக்கப்படும் சடலங்கள்! பழி தீர்க்கும் ஈரான்
ஈரான்-இஸ்ரேலுக்கு இடையிலான போர் பதற்றம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதுள்ளதாகவும் கடந்த சில மணி நேரங்களில் மாத்திரம் எட்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று அதிகாலை மொத்தம் 92 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய பொலிஸார் மற்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படுகொலை
கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் மூத்த இராணுவ அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக இஸ்ரேலுக்கு எதிராக ஈரானிய குண்டுவீச்சுகள் தொடங்கி இன்று வரை தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இஸ்ரேலிய இராணுவம் அதன் எக்ஸ் தளத்தில், இஸ்ரேல் அரசின் எல்லைக்கு எதிராக ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக பதிவிட்டுள்ளது.
அத்துடன், ஈரானின் அச்சுறுத்தலை அகற்றவும் தேவையான இடங்களில் இடைமறித்து தாக்கவும் பணிபுரியும் போது மக்கள் உள்நாட்டு முன்னணி கட்டளையின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று இஸ்ரேலிய இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.