புதிய இராணுவத் தளபதிக்கு எதிராவும் போர் குற்றச்சாட்டுகள்
புதிய இராணுவத் தளபதி விகும் லியனகே மீதும் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. புதிய இராணுவத் தளபதிக்கு எதிராக புலம்பெயர் விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆதாரமும் இன்றி முறைப்பாடு
விகும் லியனகே கஜபா படையணியில் விஸ்வமடு, புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் சேவையாற்றியதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எவ்வித ஆதாரமும் இன்றி இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜெனிவா வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விகும் லியனகே போர்க்குற்றங்களை இழைத்ததாக சாட்சியமளிக்க ஐரோப்பாவில் உள்ள 200 முன்னாள் விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் முன்வந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
