சீனாவுக்கு எதிராக மூளும் போர்! - ராணுவத்தை பலப்படுத்த $40 பில்லியன் சிறப்பு நிதி..
சீனாவின் அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்து வருவதால், 2027ம் ஆண்டுக்குள் தைவான் உயர்மட்ட போருக்கு தயார்நிலையை அடையும் என்று அந்நாட்டு ஜனாதிபதி லாய் சிங்-டே அறிவித்துள்ளார்.
மேலும்,தைவானை கைப்பற்ற சீன ராணுவம் தயாராகி வருவதாக கூறிய லாய் சிங்-டே, ராணுவத்தை பலப்படுத்த $40 பில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிராக போர்
தைவான் நாட்டை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்படும்போது, தன்னுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டுள்ளது.

தைவான் பிரச்சனையில் அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தலையிடுவதையும் எதிர்த்து வருகிறது.
இதற்கிடையே, ஜப்பான் புதிய பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், தைவானுக்கு எதிராக சீன கடற்படை அத்துமீறினால், ஜப்பான் இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என தெரிவித்தார். அவர் அக்கருத்தை பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார்.