20 ஆண்டுகளுக்கு மேலான காத்திருப்புக்கு முடிவு! யுத்தத்தால் வீடிழந்த மக்களுக்கு புதிய வீடுகள்
தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகள் அற்ற பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று(25) மாலை இடம்பெற்றது.
நலன்புரி முகாம்களில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து சிறிய குடிசைகளிலே தமது வாழ்க்கையினை நடாத்தி வந்த மக்களில் வீட்டுத் திட்டத்தைப் பூர்த்தி செய்த மூன்று பேருக்கான வீடுகள் இன்று வீடமைப்பு அமைச்சர் டொக்டர் சுனில் ரணசிங்க கையளிக்கப்பட்டது.
20 லட்சம் ரூபாய்
இதன்போது முதலாவது வீடானது மயிலிட்டி பகுதியில் உள்ள பயனாளிக்கு அமைக்கப்பட்டு அமைச்சர்களால் நாடாவை விட்டு திறந்து வைக்கப்பட்டது.

அதேபோன்று ஏனைய வீடுகள் பலாலி அண்டனிபுரம் பகுதியில் உள்ள இரண்டு குடும்பங்களுக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டது.
20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
