நுவரெலியாவில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை! உரிமையாளரிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி
நுவரெலியாவில் கண்டெடுக்கப்பட்ட பணப்பையை பொலிஸ் அதிகாரியொருவர் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்தின் முன்பாக தரையில் விழுந்திருந்த பணப்பையை, நுவரெலியா பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர் (01) இன்று எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
உரிமையாளரிடம் ஒப்படைப்பு
நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரியான ஆனந்தா (18915), இரவு ரோந்துப் பணியின்போது தரையில் விழுந்திருந்த பணப்பையை எடுத்து, அதில் இருந்த தொலைபேசி எண் மூலம் உரிமையாளரை அடையாளம் கண்டு உறுதிப்படுத்தி பணப்பையை ஒப்படைத்துள்ளார்.

யட்டியந்தோட்ட, கோமடுவாவை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 49 வயது சுரங்கா விதரானா, நுவரெலியாவில் உள்ள பெரிய சுற்றுலா விடுதியில் கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் இரவு (31) நுவரெலியா நகருக்கு வந்தபோது, அவரது கையிலிருந்து பணப்பை நழுவி காணாமல்போயுள்ளது.
அந்த பணப்பையில் ரூ. 1,500 பணமும், தனது தங்க மோதிரத்தில் பதிப்பதற்காக ரூ. 15,000க்கு அவர் வாங்கியிருந்த ஒரு இரத்தினக்கல்லும் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் என்பன இருந்துள்ளன.
நுவரெலியா பொலிஸ் பிரிவின் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதம பொலிஸ் ஆய்வாளர் ரொஷான் கூரே மற்றும் நுவரெலியா பொலிஸின் நிர்வாகப் பொறுப்பதிகாரியான பிரதம பொலிஸ் ஆய்வாளர் ராஜபக்ச ஆகியோர் உரிய விசாரணைக்கு பின் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan