மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் நடைபேரணி (Photos)
மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுகூரும் வகையிலும், காணி உள்ளிட்ட இதர உரிமைகளை வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் நடைபேரணி நேற்று இடம்பெற்றுள்ளது.
மலையகம் - 200, நாம் இலங்கையர்கள் எனும் மகுடவாசகத்துடன் முன்னெடுக்கப்பட்ட
இப்பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
மலையக மக்களின் உரிமைகள் வலியுறுத்து
ஹட்டனில் இருந்தும், நுவரெலியாவில் இருந்தும் ஆரம்பமான பேரணிகள் தலவாக்கலை நகரில் சங்கமித்ததுடன் அங்கு கூட்டமொன்றும் நடத்தப்பட்டு அரசியல் தலைவர்களின் உரைகளும் இடம்பெற்றுள்ளன.
ஹட்டன் மணிகூட்டு கோபுர சந்தியில் ஆரம்பமான குறித்த பேரணியில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகிய எம்.பிக்களும், நுவரெலியாவில் இருந்து ஆரம்பமான பேரணியில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார் ஆகிய எம்.பிக்களும் பங்கேற்றனர்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளினதும் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள், மக்கள் என பலரும் இப்பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
இதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவை தெரிவிப்பதற்காக அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார பங்கேற்றிருந்தார். குறித்த பேரணியின்போது மலையக மக்களின் உரிமைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டதுடன்,கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.









ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam