பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பற்றி ஆராய கூடுகின்றது சம்பள நிர்ணய சபை
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகச் சம்பள நிர்ணய சபை இன்று கூடுகின்றது.
தொழில் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டீ.என்.கே.வட்டலியத்த தலைமையில், கொழும்பிலுள்ள தொழில் திணைக்களத்தில் பிற்பகல் 1 மணியளவில் சம்பள நிர்ணய சபை கூடும் எனத் தெரியவருகின்றது.
கலந்து கொள்ளவுள்ளவர்கள்
சம்பள நிர்ணய சபையின் தொழில் அமைச்சின் நியமன உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கைத் தொழிலாளர் காங்ரஸின் சட்ட ஆலோசகர் கே.மாரிமுத்து, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முத்துக்குமார், விவசாய தோட்ட தொழிலாளர் காங்ரஸ் சார்பில் ஆர்.எம்.கிருஷ்ணசாமி, அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிட்னண் செல்வராஜா, இலங்கை செங்கொடி சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர் மேனகா கந்தசாமி மற்றும் பி.ஜி.சந்திரசேன உள்ளிட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகளும், தொழில் தருநர் சார்பில் பெருந்தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri