பாடசாலை மாணவிகளுக்கு கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
பாடசாலை மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பபடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர், குறித்த வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வவுச்சரின் பெறுமதி
இது குறித்து கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலை மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு உதவும் பொருட்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடையாளம் காணப்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்களுக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டமூலம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அரசால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிதி சுமார் ரூ. 1 பில்லியன் மற்றும் ஒவ்வொரு வவுச்சரின் மதிப்பும் சுமார் ரூ. 1,200 ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
