அரசாங்கத்திற்கு ஏன் வாக்குகள் குறைந்தன..! விளக்கிய பிரதி அமைச்சர்
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) கிடைக்கப் பெற்ற வாக்குகள் தொடர்பில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வாரத்தின் வேலை நாளில் நடைபெற்ற காரணத்தினால் வாக்களிப்பு வீதம் குறைந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கள தமிழ் புத்தாண்டு காலம் மற்றும் வெசாக் பண்டிகை காலம் போன்ற காரணிகளும் அரசாங்கத்திற்கு வாக்களித்தவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியில் தாக்கம் செலுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிருப்தி
மக்கள் அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக கூறப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
