பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் மாற்றம்..! வாக்களிக்கும் வயது குறைப்பு
பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதை 16ஆக குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ஈடுபாட்டை அதிகரிக்கும் வகையில் பிரித்தானிய அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய தேர்தல் மசோதாவில் குறித்த விடயம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில், பிரித்தானிய தேர்தல் அரசியலில் வெளிநாட்டு தலையீட்டை கட்டுப்படுத்துதல், அரசியல் நன்கொடைகள் குறித்த விதிகளை கடுமையாக்குதல் ஆகியவை அடங்கும்.
ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ்
1969ஆம் ஆண்டு பிரித்தானியா, வாக்களிக்கும் வயதை 21இலிருந்து 18ஆக குறைத்தது.
தற்போது 16 மற்றும் 17 வயதுடையவர்களும் வாக்களிக்கும் முறையை நடைமுறைப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் உள்ள உள்ளூர் கவுன்சில் தேர்தல்களுக்கும், செனட் மற்றும் ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கும் வாக்களிக்கும் குறைந்தபட்ச வயது 16ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
