சுமந்திரன் தமிழ் மக்களிடம் முன்வைத்துள்ள அன்பு கட்டளை

Jaffna M A Sumanthiran Sajith Premadasa Samagi Jana Balawegaya Sri Lanka Presidential Election 2024
By Rakesh Sep 18, 2024 02:02 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இலங்கைத் தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்த பிரசாரக் கூட்டம் யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில்,


அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்துள்ள உத்தரவாதம்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடம் இருந்து கிடைத்துள்ள உத்தரவாதம்

 சுமந்திரன் தமிழ் மக்களிடம் முன்வைத்துள்ள அன்பு கட்டளை | Vote For Sajith Sumanthran S Request

தாயகம் எங்கே இருக்கின்றது? 

"யுத்தம் முடிவடைந்த பின்னர் நடைபெற்ற மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் நாங்கள் தேர்ந்தெடுத்து அறிவித்த வேட்பாளருக்கு எங்களுடைய மக்கள் 80 சதவீத அளவிலே கூட ஒன்றாகச் சேர்ந்து ஒற்றுமையாக வாக்களித்து இருக்கின்றார்கள். அதன் மூலமாக பெரும் செய்தியையும் சொல்லி வந்திருக்கின்றார்கள்.

தாயகம் என்று சொல்கின்றார்கள். தாயகம் எங்கே இருக்கின்றது? அது எமது நிலத்திலே எமது மக்களிடமே இருக்கின்றது. எமது மக்கள் வாழ்வதிலே தான் அது தங்கியிருக்கின்றது. தேசமாக நாங்கள் எழுவோம் என்று சொல்லுகின்றபோது ஒரு நிலப்பரப்பிலே மக்கள் கூட்டமாக நாங்கள் வாழுகின்றபோது தான் நாங்கள் தேசமாக இருப்போம். அந்த வாழ்கின்ற உரிமையை நாங்கள் கைப்பற்ற வேண்டுமாக இருந்தால் - எங்கள் வசம் வைத்திருக்க வேண்டுமாக இருந்தால் இருக்கின்ற எங்களது இருப்பையே பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் பல சூட்சுமங்களை நாங்கள் செய்ய வேண்டும்.

அதிலே ஒரு பிரதானமான விடயம் தான் நாட்டினுடைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது. எங்களைக் கொன்று குவித்த முன்னாள் இராணுவத் தளபதிக்கு எங்களுடைய மக்கள் மதிநுட்பத்தினாலே வாக்களித்தார்கள். அதுவும் ஒற்றுமையாக வாக்களித்து பெரும் செய்தியைச் சொன்னார்கள். சிங்களவனுக்கு நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என்று எங்களுடைய மக்கள் மறுத்து புறந்தள்ளி இருக்கவும் இல்லை.பகிஷ்கரிக்கவும் இல்லை. 

தமிழனுக்கு வாக்களிக்க வேண்டுமென்று சொல்லி சிவாஜிலிங்கத்திற்குக் கூட வாக்களிக்கவேயில்லை. ஆகவே, இம்முறையும் தீர்க்க தரிசனத்தோடு - தூரநோக்கோடு - மதிநுட்பத்தோடு வாக்களியுங்கள். சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களிக்கப்போகின்றீர்கள். கடந்த மூன்று தேர்தல்களிலும் சிங்கள வேட்பாளருக்குத்தான் வாக்களித்தீர்கள்.

இவ்வாறு கடந்த மூன்று தேர்தல்களிலும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தவர்கள் - வீதி வீதியாகத் துண்டுப்பிரசுரம் கொடுத்தவர்கள் இன்றைக்குத் திடீரென்று ஏதோ நேற்றைக்குத்தான் பிறந்தவர்களைப் போல் இன்று தான் தமிழர்களாகப் பிறந்தவர்களைப் போல் தமிழன் தமிழனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று இனவாதத்தைக் கக்குகின்றார்கள். அது இனவாதம் தான்.

எங்களுடைய கட்சியை மலினப்படுத்துவதற்கும், எங்களுடைய கட்சியைப் பலவீனப்படுத்துவதற்கும் வெளியிலே இருந்து செய்த சதிகள் ஓரளவுக்காவது வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தான் எங்களது ஆதங்கம். அப்படியாகக் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு கட்சியை மலினப்படுத்துபவர்களுக்கு நீங்கள் தான் இறுதியிலே சரியான பாடம் புகட்ட வேண்டும். ஆகவே, மக்கள்தான் சரியான தீர்ப்பைக் கொடுக்க வேண்டும்.

சுமந்திரன் தமிழ் மக்களிடம் முன்வைத்துள்ள அன்பு கட்டளை | Vote For Sajith Sumanthran S Request

சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு

இந்த தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்க்கமாக முடிவு எடுத்தது. இதை இப்படிச்சொல்ல வேண்டியிருப்பதே எனக்கு வெட்கமாக இருக்கின்றது.

உண்மையில் ஒரு கட்சி ஒரு முடிவு எடுத்தால் ஒரு அறிவிப்போடு முடிந்த முடிவு தான். அதனைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் மேலும் அறிக்கைகள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுச்செயலாளர் கையெழுத்துப் போட்டு கடிதங்கள் அனுப்ப வேண்டிய தேவையும் இல்லை.

ஆனால், இன்றைக்கு அந்த தேவை ஏற்பட்டிருக்கின்றது. அது எங்களுடைய கட்சியை மலினப்படுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் வெளியிலே இருந்து செய்த சதிகள் ஓரளவுக்காவது வெற்றி பெற்றிருக்கின்றது என்பது தான் எங்களுடைய ஆதங்கம்.

சுமந்திரன் தமிழ் மக்களிடம் முன்வைத்துள்ள அன்பு கட்டளை | Vote For Sajith Sumanthran S Request 

அவ்வாறானவர்களுக்கு மக்கள் தான் சரியான பதிலடியைத் திரும்பிக்கொடுக்க வேண்டும். அவ்வாறு மக்கள் கொடுக்கின்ற தீர்ப்புதான் நிரந்தரமானதும் இறுதியானதும் அறுதியானதுமாக இருக்கும்.

ஆகையினாலே இந்தக் குழப்பங்களையெல்லாம் காண்கின்ற நீங்கள் இந்தக் குழப்பங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து நாங்கள் மதிநுட்பமுள்ள மக்கள், எங்களுக்கு வழிகாட்டுகின்ற இந்தத் தாயகக் கட்சி சொல்லியிருக்கின்றபடி தீர்க்கமான முடிவெடு்த்து எங்களுக்கு அறிவித்திருக்கின்றபடி செயற்பட வேண்டும்.

அதாவது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றுதிரண்டு ஒற்றுமையாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்ததைப் போல் இந்தத் தேர்தலிலும் தமிழ் மக்கள் திரண்டு ஒற்றுமையாக சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அன்புக் கட்டளையாக நான் உங்களிடம் முன்வைக்கின்றேன்." - என்றார்.

புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்

புலனாய்வுத்துறைக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி தேர்தல்

 

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

 


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கல்வியங்காடு, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Montreal, Canada

01 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US