ஐரோப்பிய நாடொன்றில் பாரிய நிலநடுக்கம்
கிரீஸ்(Greece) நாட்டின் தெசலி, மக்னீசியா, வோலோஸ் ஆகிய தீவுகளுக்கு அருகே பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிக்டர் அளவுக்கோளில் நிலநடுக்கமானது, 4.2 என்ற வீதத்தில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் (EMSC) கூற்றுப்படி,
நிலநடுக்க தாக்கம்
“நிலநடுக்கமானது ஜூன் 11, 2024 செவ்வாய் அன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:00 மணிக்கு கடல் மட்டத்தில் இருந்து 11 கிலோ மீட்டருக்கும் குறைந்த ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆழமற்ற நிலநடுக்கங்கள் கடல் மேற்பரப்புக்கு நெருக்கமாக இருப்பதால் ஆழமான நிலநடுக்கங்களை விட இது வலுவாக உணரப்பட்டது.
கிரீஸ் நாட்டில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அஜியா அன்னா (pop. 820), 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஸ்டியாயா (pop. 4,300) மற்றும் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஸ்கியாதோஸ் (pop. 5,200) ஆகிய இடங்களில் குறைந்த அளவிளான நடுக்கம் உணரப்பட்டிருக்கலாம்” என தெரிக்கப்பட்டுள்ளது. (pop - மேற்பரப்பு பாறைகளில் உருவாகும் மீட்டர்-அளவிலான அலைவீச்சின் நீளமான எதிர்தாக்கம்)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |