ரஷ்யாவுடனான முக்கிய ஒப்பந்தத்தை நீட்டிக்கும் உக்ரைன் ஜனாதிபதி! வெளியான தகவல்
கருங்கடல் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நீட்டிக்க முயல்வதாக அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால், கருங்கடலை சுற்றியுள்ள தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இந்த மோதல் உலகெங்கிலும் உள்ள உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கோதுமை மற்றும் பிற தானியங்களை கொண்டு செல்வதில் தடை உண்டானது.
எனினும், கடந்த சூலை மாதம் ஐ.நா-வின் தரகு ஒப்பந்தத்தின்படி, ரஷ்யா தனது கடற்படை முற்றுகையை தளர்த்தியதால் மூன்று முக்கிய உக்ரைனிய துறைமுகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.
கருங்கடல் தானிய ஏற்றுமதியை பாதுகாக்கும் ஒப்பந்தம்
ஆனால், தானிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை காலவரையின்றி நிறுத்திக் கொள்வதாக மாஸ்கோ கூறியது. இந்த நிலையில் கருங்கடல் தானிய ஏற்றுமதி குறித்து அமெரிக்க தூதரிடம் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பேசியுள்ளார்.
அப்போது, ரஷ்யாவின் விருப்பமாக இருந்தாலும் கருங்கடல் தானிய ஏற்றுமதியைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தை நீட்டிக்க உக்ரைன் முயன்று வருவதாக ஐ.நா சபைக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டிடம் அவர் தெரிவித்தார்.
மேலும், உலக உணவுப் பாதுகாப்பின் உத்தரவாதமாக இருக்க உக்ரைன் தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.
அதேபோல், கீவ் தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை மேலும் துறைமுகங்கள் மற்றும் பொருட்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும், ஒப்பந்தத்தை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கும் முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என்றும் நம்புவதாக, உக்ரைனின் துணை உள்கட்டமைப்பு மந்திரி கூறியுள்ளார்.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
