தாயக கல்விவளர்ச்சிக்காக லண்டனில் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
தாயகத்தில் கல்விநிலையில் பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள இளைய மாணவ சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிக்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களால் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த போட்டியானது எதிர்வரும் 18/06/2023 ஞாயிற்றுக்கிழமையன்று தென்கிழக்கு லண்டனில் உள்ள கற்போர்ட் பகுதியிலுள்ள Mountsfield Park, The Lodge, Stainton Rd, London SE6 1AN எனும் வெளியக மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
இராவணன் கல்வி நிறுவகத்தால் ஒன்பதாவது வருடமாக குறித்த மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாயகத்தின் கல்வி வளர்ச்சி
பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களிடையே கோடைகாலத்தில் கோடைகால விளையாட்டுப் போட்டிகள் புலம்பெயர் தாயக மக்களால் வழமையாக நடாத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தாயகத்தில் கல்வி நிலையில் பின்தங்கிய மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள இளைய மாணவ சிறார்களின் கல்விவளர்ச்சிக்கு பங்களிக்கும் முகமாக இச்சுற்றுப்போட்டியானது அணிக்கு 5 வீரர்கள் மற்றும் 4 வீரர்கள்(5A-side, 4A-side) என இரு பிரிவுகளாக நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 1வது, 2வது, 3வது இடங்களைப்பெறும் அணிக்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும், அணி வீரர்களுக்கான கிண்ணங்களுடன் போட்டி நாயகன் மற்றும் போட்டி தொடர் நாயகன் ஆகியோர்களுக்கான கிண்ணங்களும் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர்.
போட்டிகள் யாவும் 18.06.2023 ஞாயிறு காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யப்பட்ட கழகங்கள்
இப்போட்டிக்காக இதுவரை 20ற்கு மேற்பட்ட கழகங்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர் என போட்டி ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.
1/ இன்பராஜ் கழகம்
2/பாஸ்கரன் கழகம்
3/பெக்ஸிலி யுனைட்டட் கழகம்
4/லிவர்ப்பூல் தமிழர் விளையாட்டு கழகம்
5/டாட்பேட் (A)
6/டாட்பேட் நீலம் (blue)
7/வீமன்பேனாட்
8/நாகேஸ்வரா
9/கொவன்றி
10/தாயகம்
11/சுகந்தன்
12/விடுதலை
13/சுபன் சிகப்பு
14/கின்ஸ்பெரி
15/குமரநகர் கைதடி
16/ மெஸ்றோன்
17/மில்லர்
18/ சுபன் மஞ்சள்
19/எல்லாளன்
20/ தமிழர் விளையாட்டு கழகம்
21/ பாடுமீன்
22/கென்ற் போய்ஸ்
ஆகிய கழகங்கள் பதிவு செய்யப்பட்ட கழகங்களாக காணப்படுகின்றன.
இராவணன் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி முற்றுமுழுதாக தாயகத்தில் கல்வி நிலையில் பின்தங்கிய இளையோரின் கல்வி வளர்ச்சிக்காகவே நடாத்தப்படுவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |