கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos)

London Volleyball Sport
By DiasA Apr 26, 2023 07:57 AM GMT
Report

புலம்பெயர் தமிழர் வரலாற்றில் மற்றுமொரு வரலாற்று நிகழ்வாக Volleyball Premier League United Kingdom என்னும் OverGame முறையிலான மாபெரும் கரப்பந்தாட்டப்போட்டி நடைபெற்றுள்ளது.

 இப்போட்டியானது, இலண்டன் சவுத்தோலில் உள்ள (Southall) - டோமெஸ் வெல்ஸ் பொழுதுபோக்கு மண்டபத்தில் (Domers Wells Leisure Centre) உள்ள இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் மிகப் பிரமாண்டமாகவும்,மிகச்சிறப்பாகவும் 23.04.2023 அன்று நடைபெற்று முடிந்தது.

 இக்கரப்பந்தாட்ட நிகழ்வானது 30 வருட பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களின் கரப்பந்தாட்ட வரலாற்றில் முதல்முறையாக புதிய அறிமுகமாக அறிமுகப்பட்டு, மிகவும் நேர்த்தியாக நடைபெற்று முடிந்துள்ளது.

முதல் நிகழ்வாக மங்கல விளக்கை ஆறுமுகம் வவானந்தன், சந்திரப்பிள்ளை, சிங்கநாயகம், நந்தகுமார் நமசிவாயம், தங்கன், குணரட்ணம், ஜெயராஜ், செல்வமோகன் செல்லையா, சுரேஸ் (காவல்துறை - பிரித்தானியா),கண்ணன், வேகாவனவேல் சிவோதயன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

அதன்பின்னர், பிரித்தானிய கொடியை கரப்பந்தாட்ட வீரரும், VPL UK குழுமத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவருமான ஜெயரட்ணம் சுரேஷ்குமார் (சுரேஷ்)ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை கரப்பந்தாட்ட வீரரும், VPL UK குழுமத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவருமான கந்தசாமி ஜெயராஜன் (குட்டி) ஏற்றிவைத்தார்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

தொடர்ந்து VPL UK முதன்மைக்கொடியை கரப்பந்தாட்ட வீரரும், VPL UK குழுமத்தின் ஸ்தாபகரும் நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளருமான சிவகுமார் சுரேந்திரன்(சுரேன்) ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதன் பின்னராக, முதல்நிகழ்வாக அனைத்து VPL UK சிறப்பு அணிகளின் அணித்தலைவர்களுக்கான "அணித்தலைவர் பட்டியினை" கரப்பந்தாட்ட வீரரும் VPL UK குழுமத்தின் நிர்வாக உறுப்பினர்களில் ஒருவருமான சிவபாலன் ஜெயவதனன் (வதனன்) வழங்கி வைத்தார்.

இப்போட்டியில் ஒஸ்கார் லீமா, தமிழ்ப்பாலம், வொலிபோல் கிங்ஸ், மருதம், றோமியோ நவம்பர், யுனைட்டட் றைடர்ஸ், கோல்டன் ஈகிள்ஸ், தாய் மண், யுகே தமிழ்ஸ் யுனைட்டட், இசைத்தமிழ், இணைந்த கரங்கள், லண்டன் ஃபயர் என 12 VPL UK சிறப்பு அணிகள் களம் கண்டன. அத்தனை அணிகளும் மிகவும் பலம்பொருந்தியதாக இருந்தமையால், ஒவ்வொரு தனித் தெரிவுப்போட்டிகளும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. ஆட்டத்தைக்கான பெரும் தொகையான ஆதரவாளர்கள் ஆடுகளமெங்கும் நிரம்பி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

போட்டிகள் அனைத்தையும் மிக நேர்த்தியாக நடத்திட விசேடமாக அனுபவமிக்க நடுவர்கள் புள்ளிமதிப்பீட்டாளர்கள், கோட்டுக்கண்காணிப்பாளர்களாக மோகன்[East London கழகம்], வவான் (East London கழகம்), ஜெயராஜ் (இன்பராஜ் கழகம்), பத்மநாதன் (East London கழகம்), சேகர் (Dartford கழகம்), கண்ணன் (இமையாணன் கழகம்), பிரதீப் (மில்லர் கழகம்), கிருஷ்ணா (Bexley United கழகம் மற்றும் ஊடக தொடர்பு), பிரபு (எல்லாளன் கழகம்), ஜனகன் (ஐயனார் கழகம்), சுரேஸ் (பிரித்தானிய காவல்துறை), அலன் (பாடுமீன் கழகம்), கோகுலன் (செல்வா கழகம்) ஆகியோர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இப்போட்டி முற்றுமுழுதாக OverGame முறையில் 5 பேர் கொண்ட மற்றும் 4 பேர்கொண்ட கரப்பந்தாட்டப் போட்டிகளாக தனித்தனி தெரிவுப்போட்டிகளாக நடைபெற்றது. தெரிவுப்போட்டிகளில் இரண்டு ஆடுகளங்களிலும் 30 போட்டிகள் வீதம் மொத்தமாக (5A Side மற்றும் 4A Side ஆகிய இரண்டும்) 60 தெரிவுப்போட்டிகள் நடைபெற்றது. அதன்பின்னர் A, B ஆகிய இரண்டு குழுக்களிலும் விளையாடி, ஆககூடுதலான புள்ளிகளைப்பெற்ற முதல் இரண்டு அணிகள் வீதம் நான்கு அணிகள் சுப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தன. சுப்பர் 4 போட்டிகள் knocked out முறையில் விளையாடி இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தன. இறுதிப்போட்டிகள் மிகவும் ஆக்ரோசமாக நடைபெற்றது.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

5A Side போட்டியில் கோல்டன் ஈகிள்ஸ் அணி முதலாம் இடத்தினைப் பெற்று இவ்வருடத்திற்கான VPL UK கிண்ணத்தை தட்டிச்சென்றது. இந்த அணிக்கான பதக்கங்களையும், வெற்றிக்கிண்ணத்தினையும், £1000 பணப்பரிசுடன், ஆறு வீரர்களுக்கான ஊக்கப்பணப்பரிசான £300 இனையும் மன்னன், நந்தன், கேதீஸ் ஆகியோர் வழங்கிக் கெளரவித்திருந்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

5A Side போட்டியில் இரண்டாம் இடத்தினை றோமியோ நவம்பர் அணி பெற்றுக்கொண்டது. இந்த அணிக்கான பதக்கங்களையும், வெற்றிக்கிண்ணத்தினையும், £500 பணப்பரிசுடன், ஆறு வீரர்களுக்கான ஊக்கப்பணப்பரிசான £180 இனையும் கிரிதரன் (ஞானேஸ் [யூகே தமிழ்ஸ் யுனைட்டட்] சார்பாக), சுபாஸ் (கண்ணன் [தமிழ்ப்பாலம்] சார்பாக) ஆகியோர் வழங்கிக் கெளரவித்திருந்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

5A Side போட்டியில் மூன்றாம் இடத்தினை ஒஸ்கார் லீமா அணி பெற்றுக்கொண்டது. இந்த அணிக்கான பதக்கங்களையும், வெற்றிக்கிண்ணத்தினையும், £300 பணப்பரிசினையும் சந்திரப்பிள்ளை, குகன் ஆகியோர் வழங்கிக் கெளரவித்திருந்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

5A Side போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக றோமியோ நவம்பர் அணியைச் சேர்ந்த நிமல் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான கிண்ணத்தையும், £120 பணப்பரிசையும் சுரேஷ் வழங்கி மதிப்பளித்தார்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

4A Side போட்டியில் லண்டன் ஃபயர் அணி முதலாம் இடத்தினைப்பெற்று இவ்வருடத்திற்கான VPL UK கிண்ணத்தை தட்டிச்சென்றது. இந்த அணிக்கான பதக்கங்களையும், வெற்றிக்கிண்ணத்தினையும், £1000 பணப்பரிசுடன், ஆறு வீரர்களுக்கான ஊக்கப்பணப்பரிசான £300 இனையும் நந்தன்(இசைத்தமிழ்), சிவா(Maidstone கழகம்),வினோத் (Maidstone கழகம்), யசோ (Maidstone கழகம்) ஆகியோர் வழங்கிக் கெளரவித்திருந்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

4A Side போட்டியில் இரண்டாம் இடத்தினை இசைத்தமிழ் அணி பெற்றுக்கொண்டது. இந்த அணிக்கான பதக்கங்களையும், வெற்றிக்கிண்ணத்தினையும், £500 பணப்பரிசுடன், ஆறு வீரர்களுக்கான ஊக்கப்பணப்பரிசான £180 இனையும் ரஞ்சன், ரூபன் ஆகியோர் வழங்கிக் கெளரவித்திருந்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

4A Side போட்டியில் மூன்றாம் இடத்தினை ஒஸ்கார் லீமா அணி பெற்றுக்கொண்டது. இந்த அணிக்கான பதக்கங்களையும், வெற்றிக்கிண்ணத்தினையும், £300 பணப்பரிசினையும் ஹரி, குமரன் (லிங்கம் [சுபன் கழகம்] சார்பாக) ஆகியோர் வழங்கிக் கெளரவித்திருந்தனர்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

4A Side போட்டியின் ஆட்டநாயகனாக லண்டன் ஃபயர் அணியைச் சேர்ந்த ஜீவன் தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான கிண்ணத்தையும், £100 பணப்பரிசையும் குட்டி வழங்கி மதிப்பளித்தார்.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

 4A Side போட்டியின் தொடர் ஆட்டநாயகனாக இசைத்தமிழ் அணியை சேர்ந்த விஜி தெரிவு செய்யப்பட்டார். இவருக்கான கிண்ணத்தையும், £120 பணப்பரிசையும் வதனன் வழங்கி மதிப்பளித்தார்.

அத்தோடு அனைத்து நடுவர்கள், புள்ளிமதிப்பீட்டாளர்கள், கோட்டுக்கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் மதிப்புப்பளிப்புக்கிண்ணத்தினைசுரேன் அவர்கள் வழங்கி மதிப்பளித்தார்.

 அத்தோடு, VPL UK இன் இந்தவருடத்திற்கான உத்தியோகபூர்வ புகைப்பட கலைஞராகபாபா லக்ஸி கடமையாற்றியிருந்தார். அத்தோடு இப்போட்டிக்கான ஊடக அனுசரணையை ஐபிசி வானொலி, ஐபிசி தொலைக்காட்சி, மற்றும் லங்காசிறி, தமிழ்வின் ஆகிய இணையத்தளங்கள் முழுமையாக வழங்கியிருந்தது.

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

கரப்பந்தாட்ட முதன்மை தொடர் - ஜக்கிய இராச்சியம் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கின Golden Eagles (5A) மற்றும் London Fire (4A) அணிகள் (photos) | Volleyball Premier League Uk

V P L - UK போட்டிகளின் அணித்தலைவர்கள்

  • ஒஸ்கார் லீமா - ஜீவா
  • மருதம் - மன்னன்
  • யுனைட்டட் றைடர்ஸ் - மெஸ்ஸி கோல்டன்
  • ஈகிள்ஸ் - அருளீஸ்
  • இசைத்தமிழ் - ஜூலியட்
  • இணைந்த கரங்கள் - பகீர்
  • வொலிபோல் கிங்ஸ் - ராஜ்
  • தாய் மண் - அப்பன் தமிழ்ப்பாலம் - சுபாஸ்
  • றோமியோ நவம்பர் - ராஜித்
  • யூகே தமிழ்ஸ் யுனைற்றட் - சேகர்
  • லண்டன் ஃபயர் - ஜீவன்

VPL UK நிர்வாக குழுமம்

1. சிவகுமார் சுரேந்திரன்( சுரேன்)

2. ஜெயரட்ணம் சுரேஷ்குமார் (சுரேஷ்)

3. கந்தசாமி ஜெயராஜன் (குட்டி)

4. சிவபாலன் ஜெயவதனன் (வதனன்)

5. யோகானந்தன் குகானந்தன் (குகன்) 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

21 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டடி, Colombes, France

01 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி, யாழ்ப்பாணம், Olten, Switzerland

02 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, திருவையாறு, மகாறம்பைக்குளம்

31 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US