வோல்கர் - அநுர நேரில் சந்திப்பு! பேசப்பட்ட விடயங்கள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், அநுரகுமார திஸாநாயக்க மற்றும் வோல்கர் டர்க் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று(24.09.2025) பிற்பகல் நடைபெற்றுள்ளது.
மனித உரிமைகள்
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர், ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றுள்ளார்.
அத்துடன், கடந்த வருடத்தில் மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றம் தொடர்பான விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
இதேவேளை, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரியவும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
