கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஒட்டுமொத்தமாக அழிந்த தீவு (Video)
கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் ஏற்பட்ட சுனாமி அலை காரணமாக ஒரு தீவே முற்றிலும் அழிந்துள்ளது.
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன.
குறிப்பாக, எரிமலைக்கு மிக அருகில் இருந்த தீவுகளான மங்கோ தீவு, ஃப்னொய்புவா தீவு, நமுகா தீவு ஆகியவை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. 50 பேரை மொத்த மக்கள் தொகையாக கொண்ட மங்கோ தீவு முற்றிலும் தரைமட்டமானது. 15 மீட்டர் உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகள் அந்த தீவில் உள்ள அனைத்து வீடுகளையும் தரைமட்டமாகின.
இந்த எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமியால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக டோங்கோ அரசு தெரிவித்துள்ளது. சுனாமி தாக்கிய பல்வேறு தீவுகள் தற்போது வெளி உலக தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலகச் செய்திகளின் தொகுப்பு,
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam