கடலுக்கு அடியில் வெடித்து சிதறிய எரிமலை: உலகத்துடனான தொடர்பை இழந்த டோங்கோ தீவு
டோங்கோவில் கடந்த சனிக்கிழமை கடல் நீருக்கு அடியில் எரிமலை வெடித்தது. அதைத் தொடர்ந்து அந்த தீவு, நாடு உட்பட சில நாடுகளில் சுனாமி பேரலைகள் எழுந்தன. அதனால் டோங்கோ நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எரிமலை வெடிப்பு சுனாமியைத் தூண்டியதிலிருந்து அந்த நாட்டில் அடுத்தடுத்து எரிமலை வெடிப்பு, சுனாமி பேரலை போன்ற பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் டோங்கோ அரசாங்கம் நான்கு இறப்புக்களை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு உயிரிழிந்தவர்களில் மூன்று உள்ளூர்வாசிகள் மற்றும் ஒரு பிரித்தானிய பெண் பிரஜையும் உள்ளடங்குகின்றார்.
சில சிறிய வெளியிலுள்ள தீவுகள் குறிப்பாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எரிமலை வெடிப்பினால் சுற்று சூழளில் சாம்பல் படிந்ததால் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தன்னார்வலர்கள் பிரதான விமான நிலையத்தின் ஓடுபாதையைத் துடைத்து, தேவையான குடிநீர் மற்றும் பொருட்களை தரையிறக்க விமானங்களை அனுமதிக்கின்றனர்.
டோங்காவை உலகின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் நீருக்கடியில் உள்ள ஒற்றை கேபிள் துண்டிக்கப்பட்ட பின்னர் தீவுகளுக்கு இடையிளான தொடர்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam