இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக்க குரல் தட்டச்சு செயலி அறிமுகம்
இலங்கை நீதித்துறை அமைப்பில் நிலவும் வழக்கு தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன்இ திறந்த நீதிமன்ற அமர்வுகளில் வழங்கப்படும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக ஒரு சிறப்பு புதிய மென்பொருள் செயலி அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்ப அமைப்பை பரீட்சார்த்த ரீதியில் ஆரம்ப கட்டத்தில் நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் மட்டத்தில் செயல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மென்பொருள் பேச்சு-தட்டச்சு
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்து சாட்சிப் பதிவுகளையும் சரியாக படியெடுப்பதற்காக இந்த மென்பொருள் பேச்சு-தட்டச்சு தொழில்நுட்பத்தை (Voice-typing technology) பயன்படுத்துகிறது.

அதன் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு சாட்சியாளரின் குரலையும் தனித்தனியாக அடையாளம் காணும் திறன் ஆகும். இதன் மூலம், ஒரு சாட்சியாளர் பின்னர் மீண்டும் சாட்சியமளிக்கும் சந்தர்ப்பங்களில் கூட எந்தவித குழப்பமும் ஏற்படுவது தடுக்கப்படும்.
நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் வழக்கு அறிக்கைகள் மற்றும் சட்டப் பதிவுகளைப் பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால், வழக்கு அமர்வுகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவது இந்த நாட்டின் நீதித்துறை அமைப்பில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு தீவிரமான பிரச்சினையாகும்.
இந்த புதிய செயலியை நீதவான் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், தொடர்புடைய தாமதங்களைக் குறைத்து, நீதித்துறை செயல்முறையின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15