மலையக மக்களுக்கு முகவரி கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் : இ.தொ.கா உப தலைவர் விடுத்த சவால்
முடிந்தால் போராளிகளின் பெயர்களால் இரத்தினபுரியிலும், பதுளையிலும் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து காட்டுங்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் தொடர்பாக எழுந்த சர்ச்சையையடுத்து இன்று(24.1.2026) ஹற்றனில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டு ஆளும் கட்சி உறுப்பினர்களான அம்பிகா சாமுவேல் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பும் தாங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டு தாங்களுக்குள்ளேயே பதிலளித்த ஒரு வேடிக்கையான விடயம் காணக்கூடியதாக இருந்தது.
சௌமிய மூர்த்தி தொண்டமான்
அவர்களின் கூற்றுப்படி சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் பெயர் சம்பந்தமாகவும் அதற்கு ஒதுக்கப்படுகின்ற நிதி சம்பந்தமாகவும் பேசப்பட்டது.

இந்த நாட்டிலே பல சேவை செய்த தலைவர்கள் இருக்கிறார்கள்.அவர்களின் பெயரிலே மன்றங்கள் இருக்கின்றன.இது ஒரு வழமையான பழைமையான விடயம்.அது இந்த நாட்டில் மற்றுமல்ல உலகலாவிய ரீதியில் அது இருக்கின்றது.
மலையகத்தில் சௌமிய மூர்த்தி தொண்டமான் என்பவர் இந்த மக்களுக்கு முகவரி கொடுத்தவர் உரிமையை மீட்டவர்,பல போராட்டங்களை நடத்தியவர் அவ்வாறான அவரின் பெரும் சேவையினை மதித்து தான் இந்த நாட்டின் பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதியிலே அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி நிலையம்
மலையகத்திலே தலைமை போராளி சௌமிய மூர்த்தி தொண்டமான்.மலையகத்தில் பல போராட்டங்களை நடத்தி மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் சௌமிய மூர்த்தி தொண்டமான்.நீங்கள் எல்லா போராளிகளின் பெயர்களிலும் மன்றங்களை அமையுங்கள்.
பல பல நிறுவனங்களை உருவாக்குங்கள் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தைப் போல் பல தொழிற்பயிற்சி நிலையத்தை உருவாக்குங்கள்.
இரத்தினபுரி கண்டி பதுளை போன்ற இடங்களில் உருவாக்குங்கள் போராளிகளின் பெயர்களை வையுங்கள்.அதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.