வடக்கு, கிழக்கு இணைப்பினை எதிர்ப்பவர்கள் குறித்து வியாழேந்திரன் கூறியுள்ள விடயம்
சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறுவார்கள், இதுதான் யதார்த்தமான உண்மை என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டு. ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்
மேலும் தெரிவிக்கையில், கடந்த ஏப்ரல் 21 சஹ்ரான் தலைமையிலான ஈஸ்டர் குண்டு தாக்குதலில் மட்டக்களப்பு சியோன் தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலால் பலர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சஹ்ரான் பாவித்ததாக கூறப்படும் பள்ளிவாசலை பாதுகாப்பு தரப்பினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
ஆனால் அந்தப் பள்ளிவாசலை மீளவும் மக்களிடம் ஒப்படைக்க கோரி காத்தான்குடியில் ஒரு சில சிவில் சமூக அமைப்பும், அரசியல் தலைவர்களும் சேர்ந்து கடை அடைப்புடன் போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது சஹ்ரான் அவமான சின்னம், பள்ளிவாசலை இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் தாக்குதல் நடந்து தற்போது மூன்று வருடங்கள் கூட ஆகவில்லை.
யதார்த்தமான உண்மை
அதற்குள் பள்ளிவாசலை விடுவிக்க கோரி போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு செயல்படுபவர்கள் இன்னும் சில தினங்களில் சஹ்ரானுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் கூறுவார்கள். இதுதான் யதார்த்தமான உண்மை என தெரிவித்துள்ளார்.
கடந்த கால வரலாறுகளை எடுத்துக் கொண்டால் மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் அதாவது சந்திரிக்கா அம்மையார் தொடக்கம் இன்று உள்ள ரணில் விக்ரமசிங்க வரைக்கும் தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள்.
அத்துடன் சிங்கள பேரினவாத அரசியல்வாதிகளும், இனவாத பிக்குகள்
மற்றும் முஸ்லிம் மதவாத தரப்பினரும் வடக்கு, கிழக்கு இணைப்பினை
எதிர்க்கின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
