தமிழக முதலமைச்சரை சந்தித்த இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
இலங்கையின் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran) தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலினை(M. K. Stalin) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று(09.06.2024) இடம்பெற்றுள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
இதன்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஆற்றி வரும் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய நலனோம்புகை திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதுடன் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் போது மேற்கொண்ட நலத்திட்டங்களுக்கு வர்த்தக இராஜாங்க அமைச்சர் நன்றியை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவர் இலங்கை மக்களின் தேவை மற்றும் இந்திய முதலீடுகளின் அவசியம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
