வியாழேந்திரனின் தம்பி கைது!! இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்

By Independent Writer Jun 21, 2022 03:04 PM GMT
Report

 முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாழேந்திரனின் தம்பி சதாசிவம் மயூரன் 15 இலட்சம் ரூபா இலஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாகப் பிடிபட்டார்.

இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து 15 லட்சம் ரூபாய் பணம் லஞ்சம் வாங்கும்போது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்சம் கோரியவர்களில் ஒருவர் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பபினருமான சதாசிவம் வியாழேந்திரனின் சொந்த தம்பியான சதாசிவம் மயூரன் என தெரியவந்துள்ளது.

இவர் பிரதேசசபையின் ஆளும்கட்சி உறுப்பினர். மற்றவர் ஏறாவூர்பற்று பிதேச சபையின் டீ.ஓ.வாகக் கடமையாற்றும் கமலக்கண்ணன். இவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் நெருங்கிய உறவினர்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் கமலக்கண்ணன் போன்றவர்களால் இலஞ்சம் கோரப்பட்டவர், கொழும்பில் உள்ள இலஞ்ச ஒழிப்பு திணைக்களத்திற்கு முறையிட்டதைத் தொடர்ந்து, கொழும்பில் இருந்து வந்த சிறப்பு இலஞ்ச ஒழிப்பு பிரிவினரே அவர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்ததாக இலஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் தெரிவித்தது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல உணவகமான 'இப்ராஹிம் ஹொட்டேல' என்ற உணவு விடுதியில் வைத்தே இவர்கள் இலஞ்சப்பணத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், அந்த உணவு விடுதியில் தயார் நிலையில் மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாகவே அவர்களை கையும் களவுமாகப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தொடர்பாகவும், அவரது தம்பி மயூரன் தொடர்பாக படுகொலைக் குற்றச்சாட்டு உட்பட, மணல்கொள்ளை, இலஞ்சம், கப்பம் கோருதல் என்று ஏராளமான குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், வியாழேந்திரனின் தம்பி கையும் களவுமாகப் பிடிபட்ட முதலாவது சந்தரப்பம் என்று இதனைக் கூறமுடியும்.

இவர்கள் இருவரும் தற்பொழுது மட்டக்களப்பு குற்ற தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.

கடந்த வருடத்திற்கு முன்னதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் என் வீட்டு வாசல் தளத்திற்கு முன்பாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் கொலையிலும் குறித்த இலஞ்ச ஊழல் இருப்பதாக அவருடைய தாயார் பல தடவை தெரிவித்திருந்த போதிலும் இன்றுவரை தன்னுடைய மகனுடைய மரணத்துக்கு நீதிக்காக அலைந்து திரிகின்றனர்.

தற்போது இலஞ்சம் வாங்கியபோதுகைது செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தம்பி மயூரன் மற்றும் உயிரிழந்த பாலசுந்தரத்தின் படுகொலைக்கும் இடையில் தொடர்புகள் ஏதும் இருக்கின்றனவா என்ற சந்தேகமும் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US