கிழக்கில் உரிமையுடன் கூடிய அபிவிருத்தி அரசியலையே முன்னெடுப்பதாக வியாழேந்திரன் சுட்டிக்காட்டு
கிழக்கில் யதார்த்த அரசியலாக உரிமையுடன் கூடிய அபிவிருத்தி அரசியலையே தாங்கள் முன்னெடுத்துவருவதாக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
முற்போக்கு தமிழர் கழகத்தின் இளைஞர் மாநாடு வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நேற்றைய தினம் (23.04.2024) மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
யதார்த்தமான அரசியல்
அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த 7 தசாப்தமாக இலங்கை தமிழரசுக்கட்சி செய்யமுடியாதவற்றை கூறி தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளது.
நாங்கள் யதார்த்தமான அரசியலை தெரிவுசெய்து அவற்றினை முன்னெடுக்கின்றோம்.
உரிமையும் அபிவிருத்தியும் இரண்டு கண்களைப் போன்றதாகவே நாங்கள் முன்னெடுக்கின்றோம்.
இலங்கை தமிழர்களின் வரலாற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஆளும் கட்சியின் பக்கம் மாறி வெற்றிபெற்ற சாதனையை என்னைத்தவிர யாரும் செய்யவில்லை.
நான் யாதார்த்த அரசியலை செய்யமுற்பட்ட போது என்னை மேடைமேடையாக துற்றியவர்கள் இன்று காணாமல் டிபோயுள்ளார்கள்" என தெரிவித்துள்ளார்.
முற்போக்கு தமிழர் கழகத்தின் இளைஞர் பாசறையினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இளைஞர் மாநாட்டை முன்னிட்டு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திலிருந்து மட்டக்களப்பு மாநகரசபை வரையில் மாபெரும் இளைஞர் ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் முற்போக்கு தமிழர் கழகத்தின் செயலாளர் ரொஸ்மன் உட்பட கழகத்தின் முக்கிஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் join Now |





என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
